செவ்வாய், 12 நவம்பர், 2013

         புதுக்கோட்டை திருக்குறள் கழகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தோடு இணைந்து நடத்திய, சங்க இலக்கியப்  பயிலரங்கில்  11.12.2010 அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில், பாவலர் பொன்.க., எழுதி இயக்கிய “திருப்புக தேரை”,“ வாள் இங்கே நாக்கு எங்கே?” எனும் இரண்டு சங்க இலக்கிய நாடகங்களை “மணிச்சுடர்” கலைக்கூடம் வாயிலாக அரங்கேற்றியது.
          
         பங்கேற்ற கலைஞர்கள் புலவர்  மகா.சுந்தர், நா.செந்தில்பாண்டியன், பொன்.க.மதிவாணன், புலவர் மு.பா., மாது, இரா.நாகலெட்சுமி, சொ.இளங்கோ, சு.இராசேந்திரன் ஆகியோருடன்  பாவலர் பொன்.க.

1 கருத்து:

  1. என்னது, சங்க இலக்கிய நாடகமா? தமிழ்நாட்டிலா? என்னய்யா சொல்கிறீர்கள்? நம்பவே முடியவில்லையே! உங்களைப் பார்த்து இன்னும் நாலுபேர் இந்த மாதிரி தமிழ் இலக்கியக் காட்சிகளை நாடகமாக நடிக்க ஆரம்பித்துவிட்டால் தொலைகாட்சி சேனல்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்களா? அப்புறம் அவர்களின் அபத்தக் காட்சிகளையும் பாடல் போட்டிகளையும் யார் பார்ப்பார்கள்? எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள்! (2) உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. இன்னும் பரவலாக உங்களை வெளிப்படுத்துங்கள். நம்மை நாமே தான் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டிய நாட்கள் இவை. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    பதிலளிநீக்கு